ஆஸ்திரேலியாவில் நவீன அடிமைத்தனம் ஒரு குற்றமாகும், மேலும் உதவியும் கிடைக்கிறது
உங்கள் வயது, பாலினம், பாலியல், இனம், கலாச்சாரம், மதம் அல்லது விசா நிலை எதுவாக இருந்தாலும் - உங்களுக்கென்று உரிமைகள் உள்ளன – அத்துடன் உதவியும் பெறலாம்.
எங்களைப் பற்றி
கூடுதல் பரிந்துரை வழிமுறை (ARP) என்பது நவீன அடிமைத்தனம் எனப்படும் சுரண்டலை எவரும் அனுபவித்திருந்தால், அவர்கள் ஆதரவை அணுகுவதற்கான ஒரு வழியாகும்.
நவீன அடிமைத்தனம் என்பது யாரோ ஒருவர் ஆதாயம் அல்லது நன்மையைப் பெறுவதற்காக, உங்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது உங்கள் சுதந்திரம் மற்றும் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய விருப்பங்களை தெரிவுசெய்யும் திறனைப் பறிக்கவோ செய்யும் சூழ்நிலைகளை விவரிக்கிறது. நவீன அடிமைத்தனத்தில் ஆள் கடத்தல், கடன் கொத்தடிமை, ஏமாற்றி ஆள்சேர்ப்பு, கட்டாய வேலை, கட்டாயத் திருமணம், உறுப்புகளைக் கடத்துதல், அடிமைப் பணி, பாலியல் அடிமை நிலை மற்றும் அடிமைத்தனம் ஆகியவை அடங்கும்.
ங்கள் நவீன அடிமைத்தனத்தை அனுபவித்துக் கொண்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:
- அச்சுறுத்தல் அல்லது வற்புறுத்தலின் பேரிலோ அல்லது குறைந்த ஊதியத்தில் அல்லது ஊதியமே இல்லாமல் கடுமையான சூழ்நிலைகளில் பணிபுரிய அல்லது சேவைகளை (எந்த வகையான வேலையிலும் அல்லது தொழில்துறையிலும்) வழங்க நிர்பந்திக்கப்படுதல்.
- நீங்கள் செய்யும் வேலை, நீங்கள் வழங்கும் சேவைகள் அல்லது நீங்கள் எப்போது வேலை செய்வதை நிறுத்தலாம் என்பவற்றின் மீது கட்டுப்பாடு இல்லாத நிலைமை.
- வாழ்க்கையின் மற்ற பகுதிகளில் கட்டுப்பாடு இல்லாத நிலைமை, எடுத்துக்காட்டாக, நீங்கள் எப்போது, எங்கே உணவருந்தலாம், தூங்கலாம் அல்லது ஓய்வெடுக்கலாம் அல்லது நீங்கள் விரும்பும் போது நீங்கள் தங்கியிருக்கும் இடத்தை விட்டு வெளியேறலாம் போன்றவை.
- கடனை அடைப்பதற்காக வேலை செய்ய வேண்டிய கட்டாயம், ஆனால் கடனின் விதிமுறைகள் தெளிவாக இல்லை அல்லது வேலை ஒருபோதும் முடிவடையாமல் இருத்தல்.
- வேலையின் தன்மை எப்படியிருக்கும் என உங்களுக்கு சொல்லப்பட்டது போல் இல்லாமல் வேலை செய்ய ஏமாற்றப்படுதல் அல்லது சிக்க வைக்கப்படுதல்.
- சுரண்டல் நோக்கத்திற்காகப் பலாத்காரம் பிரயோகித்து அல்லது ஏமாற்றி ஆள்சேர்த்தல் அல்லது கொண்டு செல்லப்படுதல்.
- உங்கள் விருப்பத்திற்கு மாறாகவோ அல்லது திருமண வயதுக்குக் குறைந்த வயதில் அழுத்தம் தந்தோ, வற்புறுத்தியோ அல்லது ஏமாற்றியோ திருமணம் செய்து வைத்தல்.
நாங்கள் எவ்வாறு உதவ முடியும்?
- நாங்கள் இலவச மற்றும் இரகசிய ஆதரவை வழங்குகிறோம்.
- உங்கள் உரிமைகள் மற்றும் விருப்பங்களைப் புரிந்துகொள்ள நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்.
- நவீன அடிமைத்தனம் பற்றிய உங்கள் அனுபவத்தை வைத்து நாங்கள் உங்களுக்கு இலவச சட்ட ஆலோசனையை வழங்க முடியும்.
- உங்களின் உடனடிப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுத் தேவைகளுக்கு நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்.
- நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், நாங்கள் உங்களை ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்திற்குப் பரிந்துரைக்கலாம்: கடத்தப்பட்ட மக்களுக்கான ஆதரவுத் திட்டம்.
குழந்தைகள்:
- 15 அல்லது அதற்கும் குறைவான வயதுடைய, மற்றும் பாதுகாப்பான பாதுகாவலர் இல்லாத, பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த குழந்தைகள் ஆஸ்திரேலிய மத்தியக் காவல்துறையுடன் நேரடியாக இணைக்கப்படுவார்கள். தகுதியுடையவர்களாயிருந்தால், அவர்கள் ஆஸ்திரேலிய மத்தியக் காவல்துறையினால் கடத்தப்பட்ட மக்களுக்கான ஆதரவுத் திட்டத்திற்குப் பரிந்துரைக்கப்படலாம்.
- அனைத்துக் கூடுதல் பரிந்துரை வழிமுறை பணியாளர்களும், குழந்தைப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான கட்டாய நிருபர்கள் ஆவார்கள்.
ஆதாரவளங்கள்
அச்சிடுவதற்காகப் பதிவிறக்கம் செய்ய:
எனக்கு அவசரமாக உதவி தேவைப்படுகிறது
நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ உடனடி ஆபத்தில் இருந்தால், உதவிக்கு 000 -ஐ அழைக்கவும்.
எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளவும்
கூடுதல் பரிந்துரை வழிமுறையைத் தொடர்புகொள்வது இலவசமானது மற்றும் அந்தரங்கமானது. எங்கள் சேவையைப் பயன்படுத்த எந்தச் செலவும் இல்லை, உங்கள் தகவல்களை நாங்கள் இரகசியமாக வைத்துக் கொள்வோம்.
1800 000 277 என்ற எண்ணில் அழைக்கவும்
arp@salvationarmy.org.au என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்
நான் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை அணுக முடியுமா?
நீங்கள் வேறொரு மொழியில் எங்களுடன் பேச விரும்பினால், மொழிபெயர்ப்பாளர் ஒருவருடன் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்.
நான் எப்போது அழைக்க முடியும்?
எங்கள் குழுக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வேலை செய்கின்றன.
குறிப்பிட்ட இந்த நேரத்திற்கு அப்பால் நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால், ஒரு செய்தியை அனுப்பவும், அடுத்த வேலை நாளில் நாங்கள் உங்களுக்குப் பதிலளிப்போம். உங்களைத் தொடர்புகொள்வதற்கான மிகச் சிறந்த நாட்கள் மற்றும் நேரங்களையும், அத்துடன் பாதுகாப்பில்லாத நேரங்களையும் எங்களிடம் கூறவும்.
Send us an enquiry
எங்களிடம் விசாரிக்க வேண்டியதை அனுப்பவும்
உங்கள் தொலைபேசி அல்லது மின்னஞ்சலை வழங்கவும், அப்போதுதான் நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்ளமுடியும்.
பரிந்துரைக்கும் சமூகச் சேவகர்களுக்காக (caseworkers)
நீங்கள் ஒரு சமூகச் சேவகராக இருந்தால், தயவுசெய்து இந்தப் பரிந்துரைப் படிவத்தைப் பூர்த்தி செய்து arp@salvationarmy.org.au என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
உதவி பெற மற்ற வழிகள்
நீங்கள் உடனடி ஆபத்தில் இருந்தால், உள்ளூர்க் காவல்துறையின் உதவிக்கு 000 -ஐ அழைக்கவும்.

ஆஸ்திரேலிய மத்தியக் காவல்துறை (Australian Federal Police)
ஆஸ்திரேலிய மத்தியக் காவல்துறை (AFP) நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாத்து உங்களைப் பத்திரமாக வைத்திருக்கிறது.
- Crime Stoppers 1800 333 000 மூலம் அநாமதேய அறிக்கையைத் தயாரிக்கவும்
- 131 AFP -ஐ அழைக்கவும்
- இணையத்தில் புகாரளிக்கவும்
- ஆஸ்திரேலிய மத்தியக் காவல்துறை இணையதளத்துக்குச் செல்லவும்

ஆஸ்திரேலிய செஞ்சிலுவை சங்கம் (Australian Red Cross)
ஆஸ்திரேலிய செஞ்சிலுவை சங்கம், கடத்தப்பட்ட மக்களுக்கான ஆதரவு திட்டம், பரிந்துரை வழிமுறைகள் மற்றும் ஆதரவுக்கான வழிகள் பற்றிய தகவல்கள் மற்றும் இரகசிய ஆலோசனைகளை வழங்க முடியும்.
- 1800 113 015 என்ற எண்ணில் அழைக்கவும்
- national_stpp@redcross.org.au என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்
- கடத்தப்பட்ட மக்களுக்கான இணையதள ஆதரவு
இலவச மற்றும் இரகசிய ஆலோசனைக்காக (24/7 கிடைக்கும்) பின்வரும் நிறுவனங்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம் )

1800RESPECT
பாலியல் வன்கொடுமை, மற்றும் வீட்டு குடும்ப வன்முறைக்கு 1800RESPECT -ஐ தொடர்பு கொள்ளவும்.
- 1800RESPECT -க்கு குறுஞ்செய்தி அனுப்பவும் அல்லது அழைக்கவும்
- இணையவழி மூலம் தொடர்வுகொள்ளலாம் (Chat)
- அல்லது 1800RESPECT இணையதளத்தில் கூடுதல் தகவல்களைப் பெறவும்


Kids Helpline
5 முதல் 25 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு.
- 1800 55 1800 -ஐ அழைக்கவும்
- இணையவழி மூலம் தொடர்வுகொள்ளலாம் (Chat)